நாட்டின் இன்றைய நிலைக்கு ஆளுந்தரப்பு மாத்திரம் காரணமில்லையெனவும் 73 வருடங்களாக தொடர்ந்த நிகழ்வுகளின் விளைவு எனவும் நாடாளுமன்றில் கருத்து வெளியிடச் சென்ற முஷரபால் நாடாளுமன்றில் கூச்சல் உருவாகியிருந்தது.
இப்பின்னணியில் தனது பேச்சைத் தொடர முடியாமல் முஷரப் மௌனிக்க நேர்ந்த அதேவேளை, தான் சுயாதீனமாகி விட்டதாகவும் அவர் தெரிவிக்க முனைந்திருந்தார்.
பொருளாதார சீரழிவுக்கு எதிர்க்கட்சியும் காரணமென இரு பக்கத்துக்குமில்லாத நிலையில் முஷரப் கருத்து வெளியிடச் சென்றமையே அதிருப்தியலையை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment