எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா போன்றோர் ஆட்சியில் பங்கெடுத்து தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட ஒத்துழைக்க வேண்டும் என நாடாளுமன்றில் அலி சப்ரி வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அதற்கு பதிலளித்துள்ளார் எரான்.
சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இணங்கினால் ஜனாதிபதியின் புதிய அமைச்சரவையில் பங்கேற்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரே குடும்பத்திலிருந்து இருவருக்கு மேல் அமைச்சுப் பொறுப்புகளை வகிப்பதற்கு எதிராகவும் தடைச் சட்டம் வேண்டும் எனவும் எரான் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment