2021ம் ஆண்டு இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு ஸ்ரீலங்கன் விமானத்தில் பெருந்தொகை பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இன்று பரபரப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில், குறித்த பணம் உகண்டா நாட்டிற்காக இலங்கையில் அச்சிடப்பட்ட அந்நாட்டின் நாணயத் தாள்கள் என ஸ்ரீலங்கன் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தாள்கள் அச்சிடும் நிறுவனம் ஒன்று இலங்கையிலும் இப்பணிகளை முன்னெடுப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ராஜபக்ச குடும்பத்தினரே சூறையாடிய பணத்தை இவ்வாறு உகண்டாவில் ஒளித்து வைத்திருப்பதாக பரவலாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment