நேற்றைய தினம் மீரிஹனயில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதிகள் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதனை மறுத்துள்ளனர் கெஹலிய, திலும் மற்றும் சரத் வீரசேகர போன்ற முக்கிய அமைச்சர்கள்.
குறித்த சொற் பிரயோகம் தவறானது எனவும் அங்கு மத தீவிரவாதிகள் யாரும் இருக்கவில்லை. ஆனால், அரசியல் தீவிரவாதிகள் இருந்திருக்கலாம் என திலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, நாட்டைக் காப்பதற்கான போராட்டத்தில் தம்மை தீவிரவாதியாக அடையாளப்படுத்தினால், அதையும் ஏற்கத் தயார் என இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment