பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அதிகாரப் போட்டி நிலவுவதாக அரசியல் மட்டத்தில் பேச்சு நிலவி வருகின்ற நிலையில் பிரதமர் பதவி விலக எத்தனிப்பதாகவும் பெரமுன தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு முயற்சி செய்து வரும் சூழ்நிலையில் பிரதமரை பதவி விலக விட முடியாது என ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக சிங்கள மொழி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவும் இனி அரசுக்கு இல்லையென எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment