இலங்கையில் இன்று முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
விசேட வர்த்தமானியூடாக ஜனாதிபதி இதனை நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். அரசின் மீதான அதிருப்தி மக்கள் போராட்டமாக வெடித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த போராளிகளுள் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் ஆஜராகி நீதிமன்றை திணறடிக்கச் செய்திருந்தனர்.
அவசர கால சட்டத்தின் பின்னணியில் பிடியாணையின்றி எவரை வேண்டுமானாலும் தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment