கோட்டா கோ கிராமத்தில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது உணர்வுகளை வெளிக்காட்டிய பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
காலிமுகத்திடலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி நடாத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்றைய தினம் இணைந்து கொண்ட குறித்த அதிகாரி, தனது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டிருந்ததோடு ஏனைய பொலிசாரையும் மக்களோடு இணையுமாறு வேண்டியிருந்தார்.
குட்டிகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த அதிகாரியிடம் நேற்று மாலையிலிருந்து பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் இது குறித்து வினவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment