இலங்கையில் பொருளாதார சீர்குலைவு இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ள நிலையில், மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
ஆங்காங்கு போராட்டம் வெடித்து வருவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் தற்போது சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சர்வதேச அளவில் இலங்கையர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் ஒழுங்குகளும் செய்து வருகின்றனர். நியுசிலாந்தில் ஆரம்பித்துள்ள எதிர்ப்பலையைத் தொடர்ந்து லண்டனிலும் பாரிய ஆர்ப்பாட்டம் ஏற்பாடாகியுள்ளது. ஏனைய நாடுகளிலும் திட்டங்கள் கலந்துரையாடப்படுவதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment