கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கோட்டா கோ கமயில் தொடர்ச்சியான போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பௌத்த துறவியொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
திரிபேஹ ஸ்ரீதம்ம தேரரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 12வது நாளாக கோட்டா கோ கமயில் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
நேற்றைய தினம் ரம்புக்கனயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து நாடளாவிய ரீதியில் அரச விரோத நிலைப்பாடு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment