ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது முகநூல் பக்கத்தில் பதியும் பதிவுகளுக்கு 'சிரிப்பு' அடையளமே அதிகமாக வந்திருந்த சூழ்நிலையில் முதற் தடவையாக ஒரு பதிவுக்கு லைக் அதிகம் கிடைத்துள்ளது.
இறுதியாக பதியப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் நியமனம் தொடர்பான தகவலுக்கே இவ்வாறு அதிகம் லைக் கிடைக்கப் பெற்றுள்ள அதேவேளை, தற்சமயம் இந்த நடவடிக்கையையும் 3900 பேர் நகைப்புக்குரியதாக அவதானித்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக அவமதிப்பை சந்தித்து வந்த நிலையில் பார்வையாளர்கள் கருத்துப் பதிவதை ஜனாதிபதி தடை செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment