இடைக்கால அரசொன்றை நிறுவி, புதிய அமைச்சரவையை உருவாக்க ஜனாதிபதி திட்டமிடுகின்ற நிலையில் பசில் ராஜபக்சவுக்கு நிதியமைச்சு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே நபர் பசில் ராஜபக்சவென நம்பிக்கையூட்டப்பட்டு பதவி வழங்கப்பட்டிருந்த பசிலால் எந்த முன்னேற்றமும் வரவில்லை. இதேவேளை, பொருளாதார சரிவுக்கும் அவரே காரணம் என ஆளுங்கட்சியினரே குற்றஞ்சுமத்தியும் வந்தனர்.
தற்போது, அமைச்சரவையை மாற்றுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு வருகின்ற நிலையில் பசிலுக்கு மீண்டும் நிதியமைச்சு கிடைக்காது என பெரமுன பசில் எதிர்ப்பு அணியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment