இடைக்கால அரசூடாக அமைச்சுப் பதவிகளையோ பிரதமர் பதவியையோ அனுபவிக்க சமகி ஜனபல வேகய தயாரில்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
அரசாங்கம் தற்போதைய நிலைமையை புத்திசாலித்தனமாக, நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் கையாண்டால் அதற்கு ஆதரவளிக்கவும் தயார் என தெரிவிக்கின்ற அவர், தற்சமயம் மக்கள் கேட்பது ஆட்சி மாற்றம் என்பதை மறைக்க முயல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி உட்பட அனைவரும் பதவி விலகக் கோரி நடக்கும் போராட்டம் நாடாளுமன்றுக்குள் வருங் காலமும் தொலைவில் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment