புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான 'பொறுப்புள்ள' அரசாக மாறுவதற்கேற்ப அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இதற்கமைவாக அரசியல் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு பிரதமர் முன் மொழியவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகளுக்கு அரசே பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் அதனையே எதிர்பார்க்கிறார்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் மக்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரி போராட்டங்களை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment