நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், போலியான சூம்நிலைகளில் மயங்கி சிங்கள - பௌத்த உரிமைகளில் கை வைக்க இடமளியாதே எனும் கோசத்தை முன் வைத்து கொழும்பில் பிக்குகள் நடைபவணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் நான்காவது நாளாக மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், அதனை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் இனவாத சாயம் பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், அரசியல் ரீதியாக போராட்டங்களை இவ்வாறு முறியடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, தம்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோர் வரையறை மீறிய பிரச்சார செயற்பாடுகளை போராட்டக்களத்தில் இருந்தே மேற்கொண்டு வருகின்றமையும் அரசியல் பின்புலம் கொண்ட சமூக தொலைக்காட்சியென கூறிக் கொள்ளும் ஊடக அமைப்பொன்று ஒரு படி மேலே சென்று போராட்ட களத்தில் இருந்து இப்தார் ஒளிபரப்பும் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment