சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய வங்கிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியேதும் இல்லையென தெரிவித்துள்ளார் ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி.
நாடாளுமன்ற உரையின் போதே இதனை விபரித்த அவர், ஒரு வருடத்துக்கு முன்பாகவே சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரப்பட்டிருக்க வேண்டும் எனவும், பிழைக்கு மேல் பிழை நடந்து விட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
அந்த வகையில் மக்கள் படும் துன்பங்களையும் வேதனையும் தானும் அறிவேன் எனவும் தனது பங்குக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment