தமது நிர்வாகத் திறமையில் எந்தக் குறைபாடுமில்லையென தொடர்ந்தும் நம்பி வரும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, அடுத்த வாரம் அவரது பதவிக் காலத்தின் மூன்றாவது அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுனராக இருந்த கபரால் விரட்டப்பட்டுள்ளதுடன் அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய ஆளுனரை அரசு நியமித்துள்ளது.
இவ்வாறே, புதிய மாற்றங்கள் ஊடாக நிலைமையை சமாளிக்க அரசு முயற்சித்து வரும் அதேவேளை, மக்கள் தமது போராட்டங்களைக் கை விடக் கூடாது என ஹரின் பெர்னான்டோ கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment