காபந்து அரசொன்றை உருவாக்குவதற்கான முயற்சி இடம்பெற்ற போதிலும், தனது குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைக்க ஜனாதிபதி மறுத்துள்ள நிலையிலேயே அது சாத்தியமற்றுப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டங்கள் வெடித்திருந்த சூழ்நிலையில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இராஜினாமா செய்திருந்த போதிலும், இடைக்கால நிர்வாகத்திலும் அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளவே ஜனாதிபதி முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய மற்றும் மஹிந்தவும் பதவி விலக வேண்டும் என மக்கள் கோரி வருகின்ற நிலையில், இவர்களது தலைமையிலான இடைக்கால அரசுக்குத் தாம் தயாரில்லையென எதிர்க்கட்சிகள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment