போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு 'கோட்டாகோகம' பிரதேசத்தில் இருக்கை தயாராக்கி வைக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என தெரிவித்து, பிரதமர் மாத்திரம் அமர்வதற்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டத்தில் உள்ள அனைவரையும் அவர் எதிர் கொள்ள நேரிடும் என மறைமுகமான செய்தி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜபக்சக்கள் விலகாமல் போராட்டம் ஓயாது என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment