பதவி விலக மாட்டேன்: கோட்டா அடம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 April 2022

பதவி விலக மாட்டேன்: கோட்டா அடம்!

 


தான் பதவி விலகுவதென்ற பேச்சுக்கே இடமில்லையென்கிறார் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதியென்ற இடத்துக்கு வந்துள்ள கோட்டாபய ராஜபக்ச.


நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவைக் கொண்டுள்ள பக்கத்திடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயார் எனவும் அதற்காக தான் பதவி விலக வேண்டிய அவசியமில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


இச்சூழ்நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்துள்ள போதிலும்,  பெரமுன தரப்பு 113 பேரின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான தீவிர பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றமையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment