கொழும்பு, காலிமுகத்திடலில் மூன்றாவது நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது.
ஜனாதிபதியை பதவி நீங்கக் கோரி கொழும்பில் கூடிய போராளிகள், காலிமுகத்திடலிலேயே தங்கியிருந்து மூன்றாவது நாளாக போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
தற்காலிக அடிப்படை வசதிகளையும் மக்களே உருவாக்கி அங்கிருந்து போராடி வருகின்ற போதிலும் அரசாங்கம் இதற்கு செவிமடுக்கத் தவறி வருவதுடன் மாற்றீடாக புதிதாக ஒரு அமைச்சரவையை நியமிக்க முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment