ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவை பதவி விவகக் கோரி காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டம் ஏழாவது நாளாகத் தொடர்கிறது.
தொடர்ந்தும் தமது பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் பல மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதுடன் அமைச்சரவை முகங்களை மாற்றி, மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற முயன்று வருகின்றனர்.
எனினும், பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு மத்தியில் திறமையற்ற நிர்வாகிகளான ராஜபக்சக்களை பதவி விலகும் படியும் இதுவரை சூறையாடிய பணத்தைத் திருப்பித் தருமாறும் மக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment