ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு கோட்டாபய ராஜபக்ச முன் வைக்கும் எந்தத் தீர்வும் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முடிவைக் கொண்டு வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளின் முழுப் பின்னணியும் தலைவர்களின் தீர்மானங்களாகவே இருப்பதாகவும் அதற்கெதிராகவே மக்கள் கொதித்தெழுந்து தற்போது ஜனாதிபதியை பதவி நீங்கக் கோருவதாகவும் இன்றைய நாடாளுமன்ற உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜனாதிபதி எக்காரணங் கொண்டும் பதவி விலகப் போவதில்லையென ஜோன்ஸ்டன் மீண்டும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment