நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு வழியில்லையென்றால், உடனடியாக இடைக்கால அரசொன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
அவ்வாறில்லையேல், தமது கட்சியினர் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புகளைத் துறந்து அரசை விட்டு நீங்க நேரிடும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்ததன் விளைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்படுகின்ற அதேவேளை, ஏலவே விமல் வீரவன்ச குழுவினர் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment