ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டம் நடந்த இடத்துக்கு பிரதமரும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவும் இன்று விஜயம் செய்துள்ளனர்.
சுமார் 3000 பேரளவில் கலந்து கொண்ட குறித்த போராட்டம் சிறிய அளவில் ஆரம்பமான போதிலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக வேகமாக பரவியதன் பின்னணியில் பெருமளவு இளைஞர்கள் ஒன்று குவிந்திருந்தனர்.
இதன் போது அங்கு பலர் காயங்களுக்குள்ளாகியிருந்ததோடு பாதுகாப்பு தரப்பினரின் வாகனங்கள் சில தீக்கிரையாகியுள்ளது. இது தொடர்பில் இன்று ஊடக அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் ஊடக பிரிவு, திட்டமிட்ட அடிப்படைவாதிகள் உட்புகுந்து வன்முறையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment