நேற்றிரவு மீரிஹன பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இன்று நகர சபைக் கூட்டம் இடம்பெறவிருந்த நிலையில் மொரட்டுவ நகர சபை ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மொரட்டுவ பகுதியில் தச்சுத் தொழிலில் ஈடுபடும் மக்களே போராட்டத்தில் குதித்துள்ளதுடன் அரசின் நிர்வாக சீர்குலைவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளை முன் வைத்து அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் போராட்டத்தில் குதித்தவர்கள் தீவிர அடிப்படைவாதிகள் என ஜனாதிபதி ஊடக பிரிவு வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment