பாண் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேக்கரி தயாரிப்புகள் அனைத்தும் விலையுயர்த்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டிகள் 'மீட்டர்' பாவிப்பதை நிறுத்தி வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசியே சேவையைத் தொடரப் போவதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
நாட்டின் பல நகரங்களில் எரிபொருளைப் பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதோடு போராட்டங்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment