இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளை நீக்க ஆறு மாதங்களுக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக தெரிவிக்கிறார் இராஜினாமா செய்தும் நிதியமைச்சராக இருக்கும் அலி சப்ரி.
ஜுலை மாதத்துக்குள் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் பொருட் தட்டுப்பாட்டினை நீக்க வெளிநாடுகளிலிருந்து பாரிய நிதியுதவி தேவையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலயில், இம்மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை ஜனாதிபதியை பதவி விலகுமாறி கோரி மக்கள் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment