நாட்டில் தற்சமயம் நிலவும் சிக்கல்களுக்கு நாடாளுமன்றம் ஊடாக தீர்வொன்றைக் காண முடியாது போயுள்ளதாக தெரிவித்துள்ளார் சபாநாயகர்.
இந்நிலையில், தான் தொடர்ச்சியாக கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசியிருந்ததாகவும் பலரதும் அபிப்பிராயத்திற்கமைவாக அவசரமாக 21ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டம் ஊடாக மஹிந்த ராஜபக்ச பெற்ற சர்வாதிகாரத்தை 19ம் திருத்தச் சட்டம் ஊடாக ரணில் அரசு நாடாளுமன்றுக்கு அதிகாரத்தை மாற்றியிருந்தது. எனினும், அது வெளிநாடுகளுக்கு அடிமைப்படுதல் என தெரிவித்த பெரமுன மீண்டும் சர்வாதிகாரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment