மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வதற்கு 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதாக பெரமுன தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பொன்றில் 109 பேர் நேரடியாகக் கலந்து கொண்டு தமது ஆதரவை நல்கியுள்ளதாகவும் மேலும் எண்மர் தமது ஆதரவை வெளியிலிருந்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்த டலஸ் அழகப்பெருமவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதோடு, பிரதமர் பதவியில் தொடர்வதில் அதிருப்தியுள்ளதா? என்று வினவப்பட்ட போது கூட்டத்தில் யாரும் எதிர்ப்பை வெளியிடவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment