தேசிய கொள்கையொன்றை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று கொழும்பில் சத்தியாகிரகம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
யாரையும் தூற்றுவதற்காகவோ, அரசை விமர்சிப்பதற்காகவோ இதை ஏற்பாடு செய்யவில்லையென தெரிவிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியினர், தற்போதைய சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கான இப்போராட்டத்தில் அனைத்து கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள், இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் அவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்குத் தேவையான அதிகாரத்தைத் தரும்படி பொலிஸ் அமைச்சர் கேட்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment