நாட்டின் பொருளாதாரத்தை சீராக்குவதற்கு அரசுக்கு ஒரு மாத காலக் கெடு வழங்கப் போவதாகவும், தவறின் அரபு வசந்த பாணியில் நாடளாவிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ, ஜே.வி.பி உட்பட அனைத்து கட்சிகளையும் தம்மோடு கை கோர்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதன் பின்னணியில் அந்நாட்டுக்குச் செல்வது தொடர்பில் ஐக்கிய இராச்சியம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment