தவறான நிதி 'கொள்கையே' சீரழிவுக்கு காரணம்: PUCSL - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 March 2022

தவறான நிதி 'கொள்கையே' சீரழிவுக்கு காரணம்: PUCSL

 


ஆட்சியாளர்களின் தவறான நிதி மற்றும் அன்னிய செலாவணி கொள்கைகளாலேயே நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக தெரிவிக்கிறார் பொதுப் பயன்பாடுகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க.


ஆளுங்கட்சிக்குள் தம்மைத் தாமே வித்தகர்கள் என கருதி செயற்படும் சிலரின் ஆளுமைக்குட்பட்டு தவறான முடிவுகள் எடுக்கப்படுவதாக முன்னர் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார்.


இதேவேளை, பசில் ராஜபக்ச நிதியமைச்சரானதும் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிடுவார் என்றும் முன்னர் நம்பிக்கையூட்டப்பட்டு வந்தமையும் பல அரச நிறுவனங்களின் பிரதானிகளாகப் பணியாற்றிய புத்திஜீவிகள் தாமாக விலகிச் சென்றமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

No comments:

Post a Comment