IMF: நாடளுமன்றில் விவாதிக்க அழைக்கும் ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday, 27 March 2022

IMF: நாடளுமன்றில் விவாதிக்க அழைக்கும் ரணில்

 


சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவதற்கான செயற்பாடுகளை அரசு முன்னெடுப்பது உறுதியாகியுள்ளதால் இவ்விவகாரம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


முன்னதாக இதனை மறுத்து வந்த அரசு, அண்மையில் திட்ட வரைபு கிடைக்கப் பெற்றதை ஏற்றுக் கொண்டிருந்ததுடன் சர்வதேச நாணய நிதியமும் தமது பரிந்துரைகளுக்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது.


இந்நிலையில், இது நாடாளுமன்றில் விவாதிக்கப்பட வேண்டும் என ரணில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment