உலகில் வேறு எங்கும் கடன் பெற முடியாத சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பொறிமுறை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருக்கும் கடன் அளவைக் குறைப்பதோடு, பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை விளக்குமாறு இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதை ஆளுங்கட்சியின் பங்காளிகள் எதிர்த்து வந்த போதிலும் தற்போது நாடெங்கிலும் மக்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல்வாதிகள் பொருளாதாரம் குறித்து பேசுவதைத் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment