உக்ரேன் மீது தாக்குதல் நடாத்தி வரும் ரஷ்ய இராணுவம், ஐரோப்பாவின் பாரிய அணுசக்தி நிலையமாகக் கருதப்படும் Zaporizhzhia மையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
உக்ரேனில் சுமார் ஐந்து அணுசக்தி மையங்கள் இருக்கின்ற அதேவேளை, அந்நாட்டின் இராணுவ பலத்தை முழுமையாக முடக்குவதை இலக்காகக் கொண்டே தாக்குதல் நடாத்தப்படுவதாக ரஷ்யா தெரிவிக்கிறது.
தென் உக்ரேனின் முக்கிய நகரமான Kherson ரஷ்ய இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment