இன்னும் ஓரிரு மாதங்களில் நாடு எதிர்நோக்கும் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் முடிவு வரும் என தெரிவிக்கின்ற பிரசன்ன ரணதுங்க, அதன் பின் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு இரட்டிப்பு வேகத்தில் இயங்கவுள்ளது என்கிறார்.
எரிபொருள் தட்டுப்பாடு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில் ஆங்காங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் துளிர் விட்டு வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர்கள் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முயற்சி செய்து வருகின்றமையும் சிங்கள தேசத்தின் காவலர்கள் தாமே என்ற மாயை சிதைந்து விடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு புறத்தில் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment