அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள உதய கம்மன்பிலவுக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கான நேரம் ஒதுக்குவதைத் ஆளுங்கட்சி தடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு விமல் - கம்மன்பில கூட்டணி அயராது உழைத்திருந்த போதிலும் பசில் ராஜபக்சவுடனான முறுகல் முற்றி பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஊடகங்கள் ஊடாக அரசின் பலவீனங்களை வெளியிட்டு வரும் கம்மன்பில, நாடாளுமன்றில் பேசுவதைத் தவிர்க்க கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment