உரிமையாளர் இல்லாததாக பிரஸ்தாபிக்கப்படும் மல்வானை வீட்டு விவகாரத்திலிருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை விடுவிப்பதற்கான முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய குறித்த விவகாரம் தொடர்பிலான சாட்சிகள் அதற்கு மேல் வேறு முறைப்பாடுகள் எதையும் செய்யாத நிலையில் வேறு சாட்சியங்களை விசாரிப்பதற்கான அவசியமில்லையென சட்டமா அதிபர் அலுவலகம் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் மே மாதமளவில் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment