நடைமுறை அரசின் நாடாளுமன்ற பெரும்பான்மையை இல்லாதொழிப்பது இலகுவான காரியமென்கிறார் உதய கம்மன்பில.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ளதாகக் கூறும் அரசு இது வரை பெற்ற அதிகூடிய வாக்குகள் 156 எனவும் அதில் மூவர் தற்போதில்லாததால் அதன் எண்ணிக்கை 153 எனவும், தம்மோடு இருக்கும் 11 கட்சிகளைச் சார்ந்த 30 உறுப்பினர்களைக் கழித்தால் அது 123 ஆகி விடும் எனவும் புள்ளி விபரம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஏலவே மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 11 பேர் தமது தரப்போடு சேர்ந்தியங்கத் தயார் என தெரிவித்துள்ளதால் மிக இலகுவாக 112 வாக்குகள் இல்லாத நிலைக்கு அரசை தள்ள முடியும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
பெரமுன அரசை நிறுவ உழைத்த கம்மன்பில குழு தற்போது அதனை வீழ்த்த முயன்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment