காலம் முடியும் வரை பதவியை விட மாட்டேன்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 March 2022

காலம் முடியும் வரை பதவியை விட மாட்டேன்: மஹிந்த

 


தனது பதவிக் காலம் முடியும் வரை பிரதமர் பதவியைக் கை விடப் போவதில்லை என தெரவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.


தேசிய அரசாங்கம் அமைத்து, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி விட்டு மஹிந்த ராஜபக்ச ஓய்வெடுக்கப் போவதாக பரவலாக தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மஹிந்த இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தினரால் அரசை நிர்வகிக்க முடியாது என நாட்டு மக்கள் பாரிய அளவில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment