மின்சாரம், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார சிக்கலால் விரக்தியடைந்துள்ள மக்கள் இன்று ஜனாதிபதியின் மீரிஹன வீட்டருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் பாதை பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை மக்கள் தம் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
நாடு கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளமைக்கு அரசின் நிர்வாக சீர்குலைவே காரணம் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment