புலுகஹ சந்தி பிரதேசத்தில் மக்கள் போராட்டத்தினால் கொழும்பு - கண்டி போக்குவரத்து முடங்கியுள்ளது.
மீரிஹனயில் ஆரம்பித்த போராட்டம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் அரச எதிர்ப்பு நிலைப்பாடு பரவலாக வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, மக்கள் துன்பங்களை உணர்ந்த அளவில் பாதுகாப்பு படையினரும் பல இடங்களில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கொழும்பு வடக்கு - தெற்கு, மத்தி மற்றும் நுகேகொட பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment