நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவுமில்லையெனவும், அமைச்சர்களின் கருத்துக்களே தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை முட்டாள் தனமான கருத்தென விசனம் வெளியிட்டுள்ளார் நெருங்கிய பங்காளியான விமல் வீரவன்ச.
நாட்டை மிக நெருக்கடியான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டு, அங்கிருந்து மேற்குலகின் பிடிக்குள் சிக்க வைப்பதே நிதியமைச்சரின் திட்டம் எனவும் தெரிவிக்கின்ற விமல், இதனைப் புரிந்து கொள்ளாத வகையில் ஆட்சியாளர்கள் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அரசுக்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பதவி நீக்கப்பட்டதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு விலக்கப்படுபவர்களுக்கு தொலைபேசியில் அனுதாபம் தெரிவிப்பதோடு தமக்குத் தெரியாமல் நடந்து விட்டதாக விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment