இலங்கையில் பாரிய அளவில் முதலீடுகளை செய்ய சவுதி அரேபியா தயாராகி வருவதாகவும் அது குறித்து ஆராய விசேட குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி அரசுடன் அண்மையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் சாதகமாக சவுதி அரசின் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் முதலிடுவது குறித்து சவுதி அரேபியா விசேட குழுவொன்றை அனுப்பி ஆராயவுள்ளதாக வெளிச்செல்லும் இலங்கைக்கான சவுதி தூதர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment