தனது நண்பர்கள் விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் தன்னால் கடமைகளைத் தொடர முடியாதுள்ளதாக தெரிவித்திருந்த வாசுதேச நானாயக்கார, தனது அமைச்சு வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தையும் திருப்பிக் கையளித்துள்ளார்.
தற்சமயம் அமைச்சரவைக் கூட்டங்களையும் புறக்கணித்து வரும் வாசுதேவ நானாய்காரவை தாம் விலக்க அவசியமில்லையெனவும் அவராகவே விலகிச் சென்றாக வேண்டும் எனவும் அண்மையில் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
எனினும், தானாக விலகப் போவதில்லையென வாசுதேவ தெரிவிக்கின்றமையும் கடமைகளைப் புறக்கணிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment