நீதிமன்றை அவமதிக்கும் நோக்கத்தோடு தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லையாயினும், அவ்வாறே அது எடுத்துக் கொள்ளப்படுவதனால் தாம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஏலவே நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் மீதான இரண்டாவது முறைப்பாட்டின் பின்னணியிலான விசாரணை இன்று இடம்பெற்றது.
இதன் போதே ரஞ்சனின் சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்துள்ளமையும் பொது மன்னிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment