வங்கிகளிடமிருந்து கடனுறுதிக் கடிதங்கள் கிடைக்காமலிருப்பதால் எரிவாயு இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன இலங்கையின் பிரதான எரிவாயு விற்பனை நிறுவனங்களான LITRO மற்றும் LAUGFS.
கையிருப்பில் உள்ள எரிவாயு தீர்ந்ததும் தட்டுப்பாடு அதிகரிக்கும் எனவும் டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகள் கடனுறுதிக் கடிதங்களை வழங்க மறுப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏலவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் அல்லலுறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment