புதிய பிரதமருடன் பணியாற்றத் தயாராகும்படி அலரி மாளிகை பணியாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்ததாக பல சிங்கள மொழி செய்தித் தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். எனினும், ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என அவரது ஊடகப் பிரிவு கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment