ரஷ்யாவுக்கான விமான சேவை இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday 28 March 2022

 ரஷ்யாவுக்கான விமான சேவை இடை நிறுத்தம்

 


உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலை மையமாகக் கொண்டு மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடிகளின் பின்னணியில் மொஸ்கோவுக்கான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது ஸ்ரீலங்கன்.


சர்வதேச காப்புறுதி விதிகளுக்கமைவாக இந்த இடைநிறுத்தம் அவசியப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரேனிலிருந்து இவ்வருடம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருவதன் ஊடாக சுற்றுலாத்துறையில் பாரிய வருவாய் ஈட்டுவதற்கு முன்னதாக இலங்கை அரசு திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment