ஜனாதிபதியின் தலைமையில் அனைத்து கட்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகய, ஜே.வி.பி மற்றும் முன்னாள் பங்காளிகளான விமல் - கம்மன்பில தரப்பும் புறக்கணித்துள்ள நிலையில் ஏனைய சிறு கட்சிகள் பங்கேற்றுள்ளன.
அத்துராலியே ரதன தேரர், திஸ்ஸ விதாரன, ரணில் விக்கிரமசிங்க போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு இடம்பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதி தலைமையில் இச்சந்திப்பு இடம்பெறுகிறது.
சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்து அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடல் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment